இன்றைய செய்தி

Post Top Ad

08 October 2021

தொழுகையில் இருந்தவர்கள் மீது குண்டுத் தாக்குதல்..!

 


ஆப்கான் நாட்டிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேறியதனால் அந்நாட்டை தற்போது தாலிபான்கள் ஆக்கிரமித்துள்ளனர் இதனால் அங்கு ஆயுத முழக்கம் கேட்ட வண்ணமே உள்ளது.

இன்னிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளிவாசல் ஒன்றை குறி வைத்து தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குறிப்பிட்ட வெடிப்புச் சம்பவமனாது ஆப்கானிஸ்தானில் உள்ள குந்தூஸ் மசூதியில் இடம்பெற்றதுடன் 50 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் இவ் வெடிப்பு சம்பவத்திற்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இன்னும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad