நாட்டில் 18 வயது தொடக்கம் 19 வரையான வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி தொடக்கம் கொரானா தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாணவர்களுக்கு அவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளிலே அவர்களுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சுகாதார அமைச்சுக்கு அறிவித்தலை விடுத்துள்ளார்.
மேலும் அனைத்து பாடசாலைகளிலும் செலுத்தப்படும் தடுப்பூசிகள் அனைத்தும் மருத்துவர் ஒருவரின் மேற்பார்வையில் கீழ் செலுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பாக இன்றைய தினம் 8ஆம் திகதி வீடியோ தொழில்நுட்பம் மூலம் கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த ஜனாதிபதி 60 வயதிற்கு மேற்பட்டோர் கோவில் 100 சதவீதமும், 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு 98 சதவீதம், கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது மேலும் 20 தொடக்கம் 30 வரையான வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயற்திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
அத்துடன் 12 தொடக்கம் 19 வகையான வயதுடைய விஷேட தேவையுடைய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது இவை வைத்தியசாலையில் காணப்படும் சிகிச்சை நிலையங்களில மூலம் மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சுகாதாரப் பிரிவினர்களுக்கும் ,பாதுகாப்பு துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் தனது நன்றியை தெரிவித்தார்.
No comments:
Post a Comment