தாடிகளை மளிக்கவோ அல்லது வெட்டவோ கூடாது என தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மண்ட் மாகாண சலூன்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அவ்வாறு தாடிகளை மளிக்கும் அல்லது வெட்டும் சிகை அலங்கார உரிமையாளருக்கு தண்டப்பணமும் விதிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள சிகை அலங்கார நிலையங்களுக்கும் இதே அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது, தாடியை செதுக்குவது தொடர்பில் ஷரிஆ சட்டத்தை பின்பற்ற வேண்டுமென தாலிபான்களின் அவ் சிகையலங்கார நிலையங்களில் ஒட்டப்பட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கோ அல்லது குற்றம் சுமத்துவதற்கோ எவருக்கும் உரிமை இல்லை என அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment