இந்த வருடம் நவம்பர் மாதமளவில் இடம்பெறவிருந்த க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் நடைபெறும் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த அவர்கள் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
காரணம் இந்த வகுப்புகளுக்கு தேவையான பாடத்திட்டங்கள் முறையாக பூர்த்தி செய்யப்படாமையும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும் எனவும் பல தரப்புகளில் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
எனவே இது தொடர்பாக கல்வியமைச்சின் அதிகாரிகளுடனும் திணைக்களத்துடன் தொடர்புகொண்டு பரீட்சை நடாத்தப்படும் திகதி தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment