நாட்டில் எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்வே சேவைகள் அனைத்தும் சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் இயக்கப்பட இருப்பதாக அதன் மேலாளர் தம்மிக ஜெயசுந்தர அவர்கள் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் இலங்கையில் 108 ரயில்வே சேவைகள் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் அதனை இரண்டு வார காலங்களுக்கு ஒத்திவைக்குமாறு தனக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் ரயில்வே சேவைகளை நாம் இயக்க தயாராகி வருகிறோம் இதற்காக போக்குவரத்து அமைச்சகத்தின் ஆலோசனையை எதிர்பார்த்து நிற்கின்றோம்.
அதன்படி பாணந்துறை, குருநாகல் மற்றும் வெயங்கொட ரயில்வே நிலையங்களில் இருந்து அதிகப்படியான அலுவலக ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தயார்படுத்தி வருகின்றோம்.
ரயில்வே போக்குவரத்தின் போது அதன் ஆசனங்களுக்கு அமைவாக பிரயாணிகளைக் கொண்டு நாம் எமது சேவையை முன்னெடுக்கவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment