30 வயதுடைய அனுராதபுரத்தை வசிப்பிடமாகக் கொண்ட பட்டதாரி ஆசிரியரே இவ் கோரச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவமானது நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை 5 திகதி அனுராதபுரத்தில் சரவஸ்திபுர என்னும் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது, சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குழந்தையை கொலை செய்த பட்டதாரி ஆசிரியர் குழந்தையை கொன்றதும் தானாகவே பொலீஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ளதுடன் குழந்தை கொலை செய்யப்பட்டதற்கான காரணம் இதுவரையில் அவர் கூறவில்லை என்பதுடன் அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் பொலீசாரினால் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தொடர் விசாரணைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் குழந்தை கொலை செய்யப்பட்டதற்கான காரணம் வெகு விரைவில் வெளிவரும் என பொலீஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டு உடற்கூராய்வு பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment