இன்றைய செய்தி

Post Top Ad

06 October 2021

எமது பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள நாம் எந்த ஒரு நிலைக்கும் செல்வோம்...!

 


தமது சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வினை வழங்கும்படி ஆசிரியர் தினமான இன்று அதிபர்-ஆசிரியர் சங்கங்கள் இணைந்து நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தமது சம்பளப் பிரச்சினை தொடர்பாக முறையான கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறு அதிபர்- ஆசிரியர் சங்கங்கள் தமது போராட்டத்தின் போது அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு லிப்டன் பகுதியில் இன்றைய தினம் 10 மணியளவில் ஆரம்பமான இந்த போராட்டம் நாடு தழுவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் இதற்காக அதிபர் -ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறனர்.

இந்தப் போராட்டத்தின் போது அதிபர்-ஆசிரியர் சங்கங்களின் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் அவர்கள் தங்களது சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக தாங்கள் எந்த ஒரு நிலைக்கும் சென்று போராட்டங்களை நடத்த தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தது  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad