இன்றைய செய்தி

Post Top Ad

13 October 2021

பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கி கொடுக்க வேண்டாம் வாய்விட்டு கதறி அழும் தாய் தந்தை...!

 


பண்டாரகம ,ரயின்கம, குன்கமுவ பகுதியைச் சேர்ந்த 11வயதுடைய மாணவன் வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தெரிய வருவதாவது சிறுவனின் தந்தையார் வெற்றிலை விற்று தனது மகனின் ஒன்லைன் படிப்புக்காக தொலைபேசி ஒன்றை மாத தவணையில் செலுத்துவதாக வாங்கி கொடுத்துள்ளார் ஆரம்பத்தில் ஒன்லைன் படிப்புக்காக பயன்படுத்தப்பட்ட தொலைபேசியை  அவரது மகன் ஆன்லைன் கேம் விளையாடுவதற்கு பயன்படுத்தி  வந்துள்ளதுள்ளார், இதனால் ஆன்லைன் படிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக வெற்றிலை வியாபாரியான தந்தையார் கூறியதாவது 14:45 மணியளவில் தனக்கு கடையில் இருந்து கோல் வந்ததாகவும் அதில் கடையில் வெற்றிலை கூர் இல்லை என்றும் கூறப்பட்டதுடன் தன் மகனை அழைத்துச் சென்றதாகவும் அங்கு மகனிடம் வெற்றிலைக் ஊர் சுற்ற வேண்டும் என்று கூற அதற்கு  அப்பா நீங்கள் பாக்கை வெட்டித்தாருங்கள் நான் சுற்றுகிறேன் என்று கூறி தனது மகன் சுற்றி தந்ததாகவும் பின்னர் வேலை முடிந்ததும் தன்னுடனே  வந்தது அங்கிருந்த வீட்டிற்கு சென்றதாகவும் அவர் கூறினார். பின்னர் ஒரு மணித்தியாலம் கழித்து தன் வீட்டிற்குச் சென்று மகனை அழைத்தேன் நான் எப்போது அழைத்தாலும் குரல் கொடுக்கும் என் மகன் அன்று எந்த சத்தமும் எழுப்பவில்லை, மகனை அறையில் தேடினேன் அங்கு இல்லை பின்னர் சமையல் அறையில் சென்று பார்த்தபோது அதிர்ந்துபோனேன் அங்கிருந்த கொங்கிரீட் தூண் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் அவரது கால்களை பிடித்து கழுத்தில் இருந்த காயிற்றை அகற்றமுற்ப்படேன் ஆனால் முடியவில்லை 5 நிமிடம் கழித்து ஹொரணை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றேன் ஆனால் எங்கள் மகன் இறந்து விட்டார் என்று கூறிவிட்டார்கள் என அந்தத் தந்தை மனம் வலிக்க கூறினார்.

சம்பவம் தொடர்பில் சிறுவனின் திடீர் மரணம் தொடர்பாக குற்றவியல் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்ட போது அதில் சிறுவன் தொலைபேசி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாக இருந்தது தெரியவந்துள்ளது.

சிறுவனின் உடல் ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

No comments:

Post a Comment

Post Top Ad