நீண்ட நாட்களாக அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சம்பள உயர்வு போராட்டத்திற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது அதாவது அதிபர் ஆசிரியர்களின் சம்பள உயர்வு இரண்டு கட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த 93 நாட்களாக அதிபர் ஆசிரியர்களின் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அவர்களின் ஒரு கட்ட சம்பள பிரச்சனையும் அடுத்து 2023 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் அடுத்த கட்ட சம்பள பிரச்சினையும் நிவர்த்தி செய்யப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்றைய தினம் அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் கூடிய அலரி மாளிகை சந்திப்பின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
பிள்ளைகளுக்கு கல்வி முக்கியம் எனவே அவர்களது கல்வி நடவடிக்கை தங்குதடையின்றி எந்தவிதமான இடையூறும் இன்றி நடக்க வேண்டும் என்னும் காரணத்திற்காகவே அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் தெரிவித்துள்ளார்.
எனவே அதிபர் ஆசிரியர் சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் சம்பள உயர்வுப் போராட்டம் தொடர்பாக நேற்றைய தினம் வெளியான முடிவுகளின்படி அவர்களின் போராட்டம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றைய தினம் 13ம் தேதி வெளியிடப்படும் என அந்த சங்கம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment