நாட்டில் கொரோனா வைரசினால் 67 பிள்ளைகள் இறந்துள்ளதாக குடும்ப சுகாதார பணியக மருத்துவ நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார். அவற்றில் 13 மரணங்கள் வீட்டிலேயே நிகழ்ந்து உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் கொரோனாவிற்கு தாமதமாக மருத்துவம் பார்ப்பது உயிர் ஆபத்தை விளைவிக்கும் என்றும் உங்கள் பிள்ளைகளுக்கு அவ்வாறான நோய் அறிகுறி காணப்படுமாயின் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் கொரோனாவினால் 59 ஆயிரம் சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றினால் இறந்த சிறார்களுக்கு நிமோனியா தொற்று போன்றவை நோயறிகுறிகள் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக இன்றையதினம் எட்டாம் திகதி வெள்ளிக்கிழமை சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment