இன்றைய செய்தி

Post Top Ad

06 October 2021

2025ல் படையெடுக்க உள்ள சீனா, அச்சம் வெளியிட்டுள்ள அரசாங்கம்..!

 


தாய்வான் மீது 2025 ற்குள் சீனா படையெடுக்கவுள்ளதாக தாய்வான் அமைச்சரான சியூ குவோ செங் அச்சம் தெரிவித்துள்ளார்.

காரணம் தாய்வான் சீனாவிற்கு உட்பட்ட பிரதேசம் என்றும் தேவையேற்படின் சீனா தனது முழு பலத்தை பயன்படுத்தி தாய்வானை ஆக்கிரமிக்கும் என சீனா கூறி வருகின்ற நிலையில் தமது சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் எப்போதும் பறிகொடுக்க போவதில்லை என தாய்வான் கூறி வருகிறது.

கடந்த 1ஆம் திகதியிலிருந்து தாய்வானின் வான்பரப்பில் சீன போர் விமானங்கள் 150 முறை அத்துமீறி பறந்ததாக அமைச்சர் சியூ குவோ செங் அச்சம் வெளியிட்டுள்ள நிலையில் நாற்பது ஆண்டுகள் இல்லாதவாறு ஒரு பதட்டமான சூழ்நிலை தற்போது நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad