ஏழாலை பகுதியில் 6 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியுடைய 9060 போதை மாத்திரைகளை வீட்டில் வைத்து விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருடன் இணைந்து நடத்தப்பட்ட சோதனையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர் 38 வயதுடைய ஏழாலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டும் வருகின்றனர்.
No comments:
Post a Comment