நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான விலை மேலும் அதிகரிக்க பட வாய்ப்பு இருப்பதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
காரணம் பால்மா இறக்குமதிக்கான வரியை நிதியமைச்சு மீண்டும் அறவிடுமாயின் பால்மாவிற்காண விலை மீண்டும் அதிகரிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் அங்கத்தவரான லாக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு தற்போது பால்மா எந்தவிதமான கட்டுப்பாடும், தடையும் இல்லாமல் விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, எனினும் தற்போது விலை அதிகரிக்கப்பட்டுள்ள பால் மாவை விற்பனை செய்யும்போது ஒரு கிலோ பால் மாவிற்கு 80 ரூபாயும், 400 கிராம் பால் மாவுக்கு 32 ரூபாயுமாக நட்டம் ஏற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பால்மாவிற்கான இறக்குமதிவரியை நீக்கியதன் காரணமாக முன்பு அதன் விலையில் இருந்து 140 ரூபாய்க்கு குறைத்துள்ளோம் எனினும் நிதி அமைச்சின் மூலம் மீண்டும் இறக்குமதி வரி மீண்டும் அறவிடப்படுமேயானால் பால் மாவின் விலை மேலும் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டார்,
தற்போது விலை அதிகரிக்கப்பட்டுள்ளது பாலாவின் புதிய விலை சூத்திரத்திற்கு அமைய விநியோகஸ்தர்கள் அதனை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கினார்.
No comments:
Post a Comment