சுகாதாரப் பணியாளர்கள் தமது 7500/= ரூபா கொரோனா கொடுப்பனவு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டு உள்ளமையினால் மலையகத்திலுள்ள வைத்தியசாலை மற்றும் கிளினிக் போன்றவற்றிற்கு மருந்தெடுக்க சென்ற மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
குறித்த பணிப்பகிஷ்கரிப்பு ஆனது டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலைக்கு சென்ற மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
குறித்த வேலை நிறுத்தம் இன்றைய தினம் 8ஆம் திகதி காலை 7 மணி தொடக்கம் 12 மணி வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதிலுமுள்ள வைத்தியசாலைகளில் 5 மணி நேரம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் குறித்த பணி பகிஷ்கரிப்பில் போது அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மருந்து வழங்குதல் நடவடிக்கைகள் போன்றவற்றில் மருத்துவர்களும் ஒரு சில ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு அது வழமைபோல் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment