இன்றைய செய்தி

Post Top Ad

08 October 2021

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம்...!



நேற்றைய தினம் 7ஆம் திகதி இரவு 10 மணியளவில் குறிப்பிட்ட சம்பவமானது நுவரெலியா மாவட்டத்தின் ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராகலை முதலாவது பிரிவு தோட்டத்திலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் தாயார் ஒருவர் உட்பட அவரது 11வயது மகளும் ஒரு வயது குழந்தையும் அவர்களது தாத்தா பாட்டி உட்பட ஐவர்  உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் விபரங்கள் R.ராமையா 55, அவரது மனைவி முத்துலட்சுமி50, இவர்களது மகள் டிவானியா 35, இவரின் மகள் 11 வயது மற்றும் ஒரு வயது குழந்தை உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர். இவரது கணவர் வேலை விஷயமாக வெளியில் சென்றிருந்தபடியால்    அவர் உயிர் தப்பியுள்ளார் மேலும் விபத்துக்கான காரணம் தற்போது அறியப்படவில்லை போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad