இன்றைய செய்தி

Post Top Ad

07 October 2021

யாழில் கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது...!

 


யாழ்ப்பாணம் சுளிபுரம் பகுதிகள் கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் இருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கிடைத்த தகவலுக்கு அமைய வீடு ஒன்று முற்றுகையிடப்பட்டதுடன் அங்ககருந்து ஆயுத பொருட்களுடன் சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் 6ஆம் திகதி புதன்கிழமை பதிவானதுடன் சம்பவத்தில்  முற்றுகையிடப்பட்ட வீட்டிலிருந்து இருந்து அரிவாள், கோடாரி, முட்கம்பி சுற்றப்பட்ட கம்பு என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் இருபத்தி ஐந்து வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு பொலிசாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் அந்த பகுதியில் ஒரு சில வாரங்களுக்கு முன்பாக மற்றுமொரு வீட்டிலிருந்து இவ்வாறு கூறிய ஆயுதங்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

No comments:

Post a Comment

Post Top Ad