இந்தியாவின் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேற்றில் புதைந்து இறந்துபோன யானையின் உடற்பாகத்தை அருகில் இருந்த தோட்டத்தில் புதைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தபடியால் யானைக் குட்டியின் உடற்பாகத்தை துண்டு துண்டுகளாக வெட்டி வனப் பகுதிக்கு எடுத்துச்சென்று புதைத்தனர் வனத்துறையினர்.
சேரம்பாடி தனியார் பாக்கு தோட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சேற்றில் புதையுண்ட நிலையில் யானை குட்டி ஒன்று இறந்துள்ளது, புதையுண்ட யானையை விட்டு பிரிந்து செல்லாமல் தாய் யானை உட்பட மூன்று குட்டிகளும் அவ்விடத்திலேயே இருந்திருந்தது நாட்கள் போக குட்டி யானையின் சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியதால் தாய் யானை மற்றும் மூன்று குட்டிகளும் அங்கிருந்து புறப்பட்டது.
பின்னர் சேரம்பாடி பொறுப்பதிகாரி ரேஞ்சர் ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் கால்நடை வைத்திய அதிகாரியான டேவிட் மோகன் அவருடன் இணைந்து இறந்த யானையின் உடற்பாகங்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அங்கிருந்த தோட்டத்திலே புதைக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டது. அங்கிருந்த மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த படியினால் யானையின் உடல் துண்டு துண்டுகளாக ஆக்கப்பட்டு சுமார் 1500 கிலோ எடையுள்ள யானையின் உடற்பாகங்கள் தோட்டத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள வனப் பகுதிக்கு கொண்டு சென்று புதைக்கப்பட்டது.
மேலும் இறந்த குட்டி யானை 4 வயது மதிக்கத்தக்க ஆண் யானை எனவும், சேற்றில் புதையுண்ட நிலையில் எழுந்திருக்க முடியாமல் இறந்து போனதாகவும் இந்த சம்பவம் வனதுறை ஆய்வாளர்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment