கிரிக்கெட் துடுப்பினால் தாக்கப்பட்டு கடந்த மாதம் 26ஆம் திகதி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குடும்பத்தகராறு ஒன்றில் முரண்பட்ட நிலையில் கணவன் மனைவிக்கிடையிலான சண்டையில் மனைவியின் சகோதரனால் தாக்கப்பட்ட அந்த நபரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் காத்தான்குடியைச் சேர்ந்த 29 வயது உடையவர் எனவும், இந்த சம்பவத்தில் குற்றவாளியாக 25 ஐந்து வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கடந்த 28 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இம் மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment