கிளிநொச்சியில் 5 வயது சிறுமியின் வாயில் சூடு வைத்த 32 வயது உடைய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது தாய் சமையல் செய்து கொண்டிருந்த வேளையில் சிறுமி குழப்பம் செய்தமையின் காரணத்தினால் ஆத்திரமடைந்த தாயார் குழந்தையின் வாயில் சூடு வைத்ததாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
காயமடைந்த சிறுமி கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாயார் கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment