நாட்டில் இன்றைய தினம் சமையல் எரிவாயுக்களின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து அவ் விலைகளில் சிறிய மாற்றத்தினை லிட்ரோ கேஸ் நிறுவனம் கொண்டுவந்துள்ளது அதன்படி 12.5kg எடையுள்ள சமையல் எரிவாயுவின் விலை 1275 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 2,750 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் இவ் விலையகல் லிட்ரோ கேஸ் நிறுவனம் திடீர் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது அதன்படி 12.5Kg எடையுள்ள லிட்ரோ கேஸ் சிலிண்டரின் அதிகரிக்கப்பட்ட விலையில் இருந்து 75 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது அதன்படி 12.5Kg எடையுள்ள லிட்ரோ கேஸ் சிலிண்டர் ஒன்றின் தற்போதைய விலை 2,675 ரூபா என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் 5 கிலோ கிராம் எடையுள்ள லிட்ரோ கேஸிற்கு 30 ரூபாய் குறைத்து அதன் புதிய விலை 1071 ரூபாயாகவும், அதேசமயம் 2.5Kg எடையுள்ள லிட்ரோ கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டு 506 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment