இந்தியாவின் திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பெண்ணாத்தூரில் நேரு தெருவைச் சேர்ந்த 23 வயதுடைய பிரியங்கா என்னும் இளம் பெண் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிய நிலையில் குழந்தை இல்லாத காரணத்தினால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தெரியவருவதாவது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வேடந்தாங்கல் புழுதிவாக்கம் கிராமத்தில் உள்ள முருகன் என்பவருக்கும் 23 வயதுடைய பிரியங்கா என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது, திருமணமாகி நான்கு வருடங்கள் கழித்தும் குழந்தை இல்லாத காரணத்தினால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பிரியங்கா தனது சொந்த ஊரான கீழ்பெண்ணாத்தூரிற்கு தனது உறவினரின் மரண வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் தாயாரின் வீட்டிலேயே தங்கி உள்ளார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த பிரியங்கா திடீரென காணாமல் போயுள்ளதுடன் வீட்டில் இருந்தவர்கள் பிரியங்காவை தேட ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் பிரியங்கா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது, சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கீழ்பெண்ணாத்தூர் போலீசார் பிரியங்காவின் உடலை மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment