நாட்டில் எதிர் வருகின்ற 21ஆம் திகதி 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் அனைத்து ஆசிரியர்களும் கொரானா தடுப்பூசியை பெற்றிருக்க வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் இடம்பெற்ற பாடசாலைகளை ஆரம்பித்தல் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு பேசும் போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனை தெரிவித்தார்.
பாடசாலைகள் நீண்டகாலமாக மூடப்பட்டிருந்தபடியினால் ஆரம்பத்தில் பாடசாலைகளை துப்பரவு செய்து சிரமதானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், பாடசாலை சிறுவர்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த காணொளி காட்சிகளை காண்பித்து அவர்களை ஊக்கப்படுத்துவது அவசியம் மேலும் தற்போது நாட்டில் டெங்கு பரவும் நிலை காணப்படுவதனால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் கிணறு மற்றும் குடிநீர் தடாகங்கள் போன்றவை குளோரின் போட்டு சுத்திகரிக்கப்பட வேண்டும் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நேரங்களில் சமூக இடைவெளிகள் பின்பற்றக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும் மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தரும் நேரம் மற்றும் உணவு அருந்தும் நேரம் போன்றவை சமூக இடைவெளிகள் பின்பற்ற மாணவர்களுக்கு ஊக்கப் படுத்தவேண்டும் பாவிக்கப்பட்ட முகக்கவசம் என்பவற்றை சரிவர அப்புறப்படுத்த வேண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் முன் தொற்று நீக்கிகள் தெளிக்கப்படுதல் வேண்டும் போன்றவை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டது.
No comments:
Post a Comment