மலேரியாவுக்கான முதல் தடுப்பூசி ஆபிரிக்க குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது.
மலேரியாவுக்கான தடுப்பூசியான ''மாஸ்குயிரிக்ஸ்'' 1987 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது எனினும் அதனுடைய செயல் திறன் குறைவாக காணப்பட்டபடியால் அந்த தடுப்பூசியை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் ஒரு கட்டமாக 2019ஆம் ஆண்டு கானா ,கென்யா ,மாலவி போன்ற நாடுகளில் 8 லட்சத்துக்கும் அதிகமான சிறார்களுக்கு இவ் மேம்படுத்தப்பட்ட மலேரியா தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரப்பட்டு வந்தது, அதில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகளை கொண்டு தடுப்பூசியை செலுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பு கடந்த புதன்கிழமை அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி மலேரியாவுக்கான சரியான தடுப்பூசியை ஆபிரிக்க சிறுவர்களுக்கே முதன்முதல் வழங்கப்பட உள்ளது இது ''வரலாற்று சிறப்புமிக்க தருணம்'' என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார், மேலும் உலகளாவிய ரீதியில் மலேரியாவை தடுப்பதற்கு பலதரப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான தடுப்பூசி கிடைத்திருப்பது அதிகாரிகள் மத்தியில் பெரிதும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment