குடும்பத்தகராறு முற்றியதன் விளைவாகத் தனது சொந்த தம்பியை கூரிய ஆயுதத்தினால் தாக்கியதினால் தம்பி மரணமடைந்துள்ளார், இந்த குறித்த சம்பவமானது மாத்தளை கழுதேவல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது குடும்ப தகராறு முற்றியதன் காரணமாக ஆத்திரமடைந்த அண்ணன் தம்பியை அருகிலிருந்த கூரிய ஆயுதத்தால் தாக்கியதன் விளைவால் 31 வயது உடைய நபர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் மாத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment