கொழும்பில் இன்றைய தினம் 13ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்ட அமைச்சர் உதய கம்மன்பில அவர்கள் நிதி அமைச்சர் உரிய நிவாரணத்தை வழங்காவிட்டால் நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டிய வாய்ப்பு உள்ளது என எரிசக்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதற்கு அமைவாக ஒரு லிட்டர் பெட்ரோல் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும், ஒரு லிட்டர் டீசலின் விலை 25 ரூபாவினால் அதிகரிப்பதற்கு லங்கா ஐ.ஒ.சி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார், அத்துடன் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதே கோரிக்கையை முன்வைத்து உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். எனினும் இந்தக் கோரிக்கைகள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றதே தவிர இன்னும் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அவர்கள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment