தொடங்கொடபொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடவத்தகொட பகுதியில் இறந்த நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது, குறித்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள பெண் அப்பகுதியில் வசித்துவந்த 54 வயதுடைய ஆவார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ள பெண், குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் அறையிலிருந்து தலை மற்றும் கை கால் போன்ற பகுதிகளில் ரத்தம் கசிந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து தொடங்கொட பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment