எதிர்வரும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்பு மாகாண சபைத் தேர்தலை நடத்த இருப்பதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் மாகாண சபை தேர்தல் முறையில் மேற்கொள்ளப்பட இருக்கின்ற திருத்தங்கள் தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு , தேர்தலை நடாத்துவதற்கான பொருத்தமான சூழல் இதன் மூலம் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இம்முறை மாகாண சபைத் தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படையில் இடம்பெறும் எனவும் எதிர்க்கட்சிகள் கூறிவது போன்று வெளிநாட்டு தலையீடு இன்றி எமது சுய முடிவின் மூலம் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்த தீர்மானிக்க ப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக நேற்றைய தினம் 11 ஆம் திகதி திங்கட்கிழமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
No comments:
Post a Comment