வவுனியா கற்பகபுரம் பகுதியில் நான்காம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றின் ஜன்னல் மற்றும் கதவுகளின் ஊடாக புகை வந்ததை அடுத்து அயலவர்கள் சென்று பார்த்த போது வீட்டில் தீ பற்றி உள்ளது குறித்த வீட்டில் இருந்த பெண் ஒருவரும் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளாகி இறந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றையதினம் 14ஆம் திகதி காலை வேளையில் பதிவாகியுள்ளது, இந்நிலையில் அயலவர்கள் சென்று கதவை உடைத்து தண்ணீர் ஊற்றி காப்பாற்ற முற்ப்பட்ட போது அந்தப் பெண் முழுவதுமாக தீயில் கருகி மரணம் அடைந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் எரிகாயங்களுடன் இறந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார், இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர் இதில் ஒருவர் வேலைக்கு வெளியில் சென்றுள்ளார்,மற்றையவர் கடைக்கு சென்றுள்ளார் ,இன்னும் ஒருவர் மலசல கூடத்திற்குள் இருந்துள்ளதுடன் மலசலகூடம் வெளியால் பூட்டப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 41 வயதுடைய பெண்மணியே இறந்துள்ளார் சம்பவத்தின் போது அவரது கணவர் வீட்டில் இருக்கவில்லை அவர் நெளுக்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார், சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment