நாட்டில் கொரோனாவினால் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியின் காரணமாக அரசாங்கம் அரச ஊழியர்களின் மாத சம்பளத்தை வழங்குவதில் பெரிதும் போராடி வருகிறது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்றைய தினம் வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் 14 இலட்சம் பெறுமதியான ராஜாங்க அமைச்சின் கீழ் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது இந்தியாவின் அழுத்தத்தினால் மாகாணசபைத் தேர்தல் இடம் பெறவில்லை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் தீர்மானத்திற்கு அமைய தேர்தல் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது ஆயினும் அதைப் பற்றி எந்தவிதமான அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
மேலும் எமது நாடு வளம் மிக்க நாடு தீர்க்கமான சுயமாக முடிவெடுக்கக் கூடிய நாடு இனி வரப்போகும் புதிய திட்டங்கள் என்பவற்றை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம், அதில் பின்தங்கிய கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், தற்போது நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளது அரசாங்கம் அரசு ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்கு கூட திண்டாடி வருகிறது, அதிகரிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவு பொருட்கள் விலை நிரந்தரமானது அல்ல தற்காலிகமானதே என்று மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment