இன்றைய செய்தி

Post Top Ad

13 October 2021

நாடு திரும்பினார் மெனிக்கே மகேஹித்தே புகழ் பாடகி...!

 


தனது ஒரே பாடலின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் இலங்கையில் இளம் பாடகியான யொஹானி சில்வா இந்தியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

இரண்டு வார காலங்களில் இந்தியாவில் இருந்து அங்கு இடம்பெற்ற பல இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இன்று அதிகாலை அவர் நாட்டை வந்தடைந்துள்ளார், தனது சுற்றுப் பயணத்தின்போது யொஹானி குறிப்பிட்டதாவது.

இந்தியாவில் மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற பகுதிகளில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன் அங்கு மக்கள் எனக்குப் பெரும் வரவேற்பை கொடுத்தார்கள் மகிழ்ச்சியாக இருந்தது இன்னும் அதை தொடர்ந்து 12 சிங்கள ஆல்பம் பாடல்களை வெளியிடுவது எனது நோக்கம் எனவும் அதன் பணிகள் நடைபெற்று வருகின்றது எனவும் குறிப்பிட்டார்.

மேலும் ராணுவம் மற்றும் விமான பாதுகாப்பு பிரிவினரால் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன் கொழும்பிலிருந்து விசேட வாகனத்தின் மூலம் அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad