இன்றைய செய்தி

Post Top Ad

09 October 2021

மீன்பிடிக்கச் சென்ற வாழைச்சேனை மீனவர் நால்வரை காணவில்லை...!

 


கடந்த இருபத்தி ஆறாம் திகதி ஆழ் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நால்வரை காணவில்லை என படகின் உரிமையாளர் எம்.எஸ்.அன்வர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் பதிவு செய்துள்ளார், இது தொடர்பாக தெரியவருவதாவது.

கடந்த 26 ஆம் திகதி செப்டம்பர் மாதம் அன்று வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நால்வர் இன்று 9ஆம் திகதிவரை அவர்கள் குறித்த எந்தவிதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என படகின் உரிமையாளர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் படகில் சென்றவர்களது  பெயர் விபரங்களாக எம்.எச்.முஹமட், எம்.வி.ரிஸ்கான், கே.எம்.ஹைதர், ஏ.எம்.ரியால் போன்ற நால்வருமே அந்தப் படகில் சென்றுள்ளதாக அவ்வுரிமை குறிப்பிட்டுள்ளார் மேலும் அந்தப் படகு நீல நிறத்தை உடையது என்றும் அதன் இலக்கம் A0093 எனவும் அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

அவ்வாறு இவர்கள் குறித்து தகவல் கிடைக்கப் பெறும் பட்சத்தில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் பிரதான  தொலைபேசி இலக்கமான 065-2257709 எண்ணிற்கும் அல்லது படகின் உரிமையாளர் இலக்கமான 077-9581915 என்பவற்றுக்கும் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad