உலகளாவிய ரீதியிலும் நம் நாட்டிலும் தற்போது அச்சத்தை ஏற்படுத்த கொண்டிருக்கும் ஒரு விடயம் கொரோனா வைரஸ் நாம் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகள் சமய சகவாழ்வுடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணித்துக் கொண்டிருக்கின்றோம். கொரோனா நேரங்களில் நாம் சரியான சுகாதார மற்றும் ஆன்மீக நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இவற்றை எம்மால் வெல்ல முடியும்.
அன்னை அம்பிகையின் அருள் வேண்டி நோன்பு இருந்து இறுதி நாளான இன்று விஜயதசமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது, முன்னைய காலங்களில் விஜயதசமி இறுதி நாள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் அதனை நாம் மீண்டும் பெறுவதற்கு அம்பிகையின் அருளை பெற பிரார்த்தனை செய்வதன் மூலம் எமக்கு அருள் கிட்டும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி விரதங்களை அனுஷ்டிக்க வேண்டும்.
மனித குலத்தின் வாழ்வியலின் அடிப்படையை எடுத்துக்காட்டும் கல்வி ,வீரம் ,செல்வம் என்பவற்றை துர்க்கை, லட்சுமி ,சரஸ்வதி போன்ற மாபெரும் சக்திகள் நமக்கு அள்ளித் தருகின்றன அவர்களுக்கு நன்றி கூறும் முகமாக விரதங்கள் அனுஷ்டித்து எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
என் அன்பிற்குரிய இலங்கை வாழ் இந்து மக்களுக்கு இவ்விரதத்தின் இறுதி நாளான விஜயதசமி அன்று எனது வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
சிறப்பு வாய்ந்த இந்நன்னாளில் அன்னையின் அருளையும் ஆசியையும் பெற்று சகல சௌபாக்கியங்களுடன் இருக்க இலங்கைவாழ் அனைத்து மக்களுக்கும் இறை ஆசி வேண்டி வாழ்த்துகிறேன்.
No comments:
Post a Comment