இன்றைய செய்தி

Post Top Ad

03 June 2022

அரச உத்தியோகத்தர்களுக்கு பேரிடி! இடைநிறுத்தப்பட்ட செயற்திட்டம்.


அரச கரும மொழிகள் திணைக்களம் நிதிப்பற்றாக்குறை காரணமாக அரச ஊழியர்களின் மொழிப்புலமை பாடநெறிகளை இடைநிறுத்தியுள்ளது இதனை நாட்டின் ஆசிரியர் சங்கமொன்று தெரிவித்துள்ளது.


 அரச உத்தியோகத்தர்களுக்கான அரச மொழிப் புலமைப் பாடநெறி ஏற்கனவே நடைமுறையில் இருந்த விதிமுறைகள் காலாவதியானதையடுத்து மீண்டும் ஆரம்பிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச கரும மொழிகள் ஆணையாளர் நாயகம் அறிக்கையொன்றை விடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.




பொது நிர்வாக சுற்றறிக்கை 18/2020 இன் படி 2007ற்குப் பின்னர், பொது சேவையில் நுழைந்த அரச ஊழியர்கள் 16.10.2020ற்கு முன்னதாக, மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டாம் மொழி புலமை தொடர்பான பாடநெறியை நிறைவு செய்ய வேண்டும். செய்யப்படாத பட்சத்தில், அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுகளை இழக்க கூடிய நிலை ஏற்படும்.


 நாடு தற்போது உள்ள  பொருளாதார நெருக்கடியின் காரணமாக போதிய ஏற்பாடுகள் இல்லாததினால் மொழிப் பாடநெறிகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக முடிக்கும் திறனை அரச கரும மொழிகள் திணைக்களம் இழந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.


 இந்நிலையில், 2007ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரச சேவையில் இணைந்த பெருமளவிலான ஆசிரியர்களும், அதிபர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்களும் மொழிப் புலமையை நிறைவு செய்யும் வாய்ப்பை இழந்துள்ளனர் என ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


அரச ஊழியர்கள் அவர்களது மொழிப் புலமையைப் பூர்த்தி செய்யாத பட்சத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுகள் நிறுத்தப்படுவதால், தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள்.


 இது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டு அரச உத்தியோகத்தர்களுக்கு மொழிப் புலமையை பூர்த்தி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீடிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad