நாட்டில் மண்ணெண்ணைக்கான தட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் மண்ணெண்ணை உற்பத்தி செய்யப்படும் வரையில் நாட்டில் இந்த மண்ணெண்ணெய் பற்றாக்குறை நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயுவிற்கு பற்றாக்குறை நிலவி வருவதால் மண்ணெண்ணைக்கான கேள்வி வெகுவாக அதிகரித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு 600 தொன் மண்ணெண்ணை பயன்படுத்தப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மண்ணெண்ணை தேவைக்காக இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் விமானங்களுக்காக பயன்படுத்தப்படுவதனாலும் இந்த பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளும், மண்ணெண்ணைக்காக பயன்படுத்தப்படும் எரிபொருளும் கிட்டத்தட்ட ஒரே விதமானவை எனவும் ஓர் சிறு இரசானய மாற்றத்தினால் இரண்டும் வேறுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவி வரும் மண்ணெண்ணை பற்றாக்குறையினால் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன், மக்கள் நீண்ட வரிசையில் பல நாட்களாக காத்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
No comments:
Post a Comment